கோபி தாத்தா.. புதுசா கல்யாணம் செஞ்ச கோபிக்கு அடுத்த சிக்கல்!
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி அவரது காதலி ராதிகாவை திருமணம் செய்துகொண்டே பாக்யா இருக்கும் வீட்டுக்கு எதிரிலேயே குடிவந்திருக்கிறார். அதனால் குடும்பத்தினர் கோபியை சந்திக்கும் போதெல்லாம் அவரை வெச்சி செய்கிறார்கள்.
மேலும் ராதிகாவும் சமையல், காபி விஷயத்தில் கோபியை இன்னும் அதிகமாக கொடுமை படுத்துகிறார். காபி கேட்டால்.. 'நீயே போட்டுக்கோ', சாப்பாடு கேட்டால் 'ஆர்டர் பண்ணிக்கோங்க' என சொல்வது, அல்லது ஓட்ஸ் கஞ்சி செய்து கொடுத்து சாப்பிட சொல்வது என செய்து வருகிறார் ராதிகா.
தாத்தா ஆன கோபி!
இந்நிலையில் கோபி -பாக்யாவின் மூத்த மருமகள் ஜெனி கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் மொத்த குடும்பமும் மகிழ்ச்சி ஆகிறது.
அதன் பின் கோபியின் அப்பா ரோட்டில் நிற்கும்போது கோபி - ராதிகா உடன் காரில் வந்து இறங்குகிறார். அப்போது நான் கொள்ளு தாத்தா ஆயிட்டேன் என கத்தும் அவர், கோபியை 'தாத்தா.. தாத்தா..' என கலாய்க்கிறார்.
புதிதாக திருமணம் செய்திருக்கும் கோபி தற்போது தாத்தா ஆகி இருப்பது மேலும் கதையில் சுவாரஸ்யத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.