நடிகர் கவுண்டமணி மகளுக்கு நடந்த திருமணம்!! வருகை தந்த சூப்பர் ஸ்டார்..
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களின் காம்போவில் வந்த காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் - ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். கவுண்டமணி நடிப்பில் கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு வாய்மை எனும் திரைப்படம் வெளிவந்தது.
தற்போது கவுண்டமணி யோகி பாபு இணைந்து நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் ஷூட்டிங் நிறைவு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராதிகாவையும் விட்டுவைக்காத பாலய்யா!! நீங்களாம் மனுஷங்களாடா திட்டி தீர்த்த பிரபல நடிகை.. வெளுத்து வாங்கிய பிரபலம்
நடிகர் கவுண்டமணிக்கு இரு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளின் திருமணத்தின்போது, சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அங்கு வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்..