தெருவில் தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட கவுண்டமணி! யார் இந்த குழந்தைகள் தெரியுமா?

sathyaraj sibiraj goundamani divyasathyraj Vaazhkai Sakkaram
By Edward Mar 28, 2022 05:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக திகழ்ந்து வந்தவர் கவுண்டமணி. கவுண்டமணி - செந்தில் காமினேஷன் என்றாலே போதும் படத்தினை பார்க்கவே அவ்வளவு கூட்டம் கூடுமாம். பல முன்னணி நடிகர்கள் படத்தில் இரண்டாம் கதாநாயகனாக திகழ்ந்த கவுண்டமணி மட்டும் படம் இருந்தால் போதும் என்று இயக்குனர்கள் எண்ணிய காலம் அது.

அப்போது சத்யராஜுடன் அவர் நடித்த காமெடிகள் இன்றும் பேசப்படும். அப்படி இயக்குனர் மணிவண்ணன் இயக்கி 1990ல் வெளியான படம் வாழ்க்கை சக்கரம். இப்படத்தில் சத்யராஜுடன் கெளதமி, ஜெய்கணேஷ், வினுச்சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்து பெரிய ஹிட் கொடுத்த படமாக அமைந்தது.

இப்படத்தில் அனைத்து பாடல்களையும் சங்கர் கணேஷ் இசையில் எஸ்பிபி தான் பாடியிருப்பார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சத்யராஜ் மகன் சிபி மற்றும் மகள் திவ்யா சத்யராஜ் உடன் கவுண்டமணி சாப்பிட்ட புகைப்பட இணையத்தில் வைரலாகி வருகிறது. நடுத்தெருவில் தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட புகைப்படம் தான் அது..

Gallery