அதுக்கு மட்டும் இத்தனை கோடியா!! சமந்தா சம்பளத்தை விட வாரிகுவித்த தயாரிப்பாளர்..

Samantha Shaakuntalam
By Edward Apr 14, 2023 07:30 PM GMT
Report

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகையாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை சமந்தா, தமிழில் பாணா காத்தாடியும் தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ரீமேக்கிலும் நடித்து பிரபலமானார்.

இதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.

அதுக்கு மட்டும் இத்தனை கோடியா!! சமந்தா சம்பளத்தை விட வாரிகுவித்த தயாரிப்பாளர்.. | Grandeur For Samantha To Keep The Real Shakuntalam

கஷ்டப்பட்டு வந்த சமந்தா வெளிநாட்டு சிகிச்சை என்று தீவிர சிகிச்சை மேற்கொண்டு உடற்பயிற்சி செய்து மீண்டு திரும்ப ஆயத்தமானார். படிப்படியாக அதிலிருந்து மீண்டு வருகிறேன் என்று சமீபத்திய பேட்டிகளில் கூறி வந்தார். தற்போது சாகுந்தலம் படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டெக்னிஷன் வேலைகளுக்காக தயாரிப்பு நிறுவனம் பல கோடிகளை வாரி இறைத்துள்ளது. அந்தவகையில் நடிகை சமந்தா படத்தில் போட்டிருந்த நகைகள், வைரங்கள் உள்ளிட்டவைகளில் செய்த ரியல் ஆபரணங்கள் பயன்படுத்தபட்டுள்ளதாம்.

பெரும்பாலான படங்களில் கவரிங் நகைகள் பயன்படுத்தப்படும். ஆனால் ரியாலிட்டிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக, 14 கோடி செலவில் வாடகைக்கு உண்மையாக தங்கம் மற்றும் வைர நகைகள், ஆடைகள் என்று அணிவித்து நடிக்க வைத்துள்ளார்களாம்.

ஒரு படத்தில் நடிகை சமந்தா கிட்டத்தட்ட 4 கோடி சம்பளமாக பெற்று வருகிறார். அவரின் சம்பளத்தைவிட்ட டெக்னிக்கலுக்காக இப்படியா செலவு செய்வார்கள் என்று விமர்சித்தும் வருகிறார்கள்.

GalleryGallery