GROK டிரெஸ் ஸ்வாப் மூலம் நடிகைகளுக்கு அடுத்த தலைவலி..கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..

Twitter Gossip Today Indian Actress X
By Edward Mar 31, 2026 12:45 PM GMT
Report

GROK என்ற AI

எக்ஸ் தளம் GROK என்ற AI ஆப்ஷனையும் கையில் கொடுத்து இளைஞர்களை உசுப்பேற்றி வரும் எலன் மஸ்க்-ஆல் பலரும் க்ரோக்கிடம் நடிகைகளை பிகினி உடையில் மாற்று என்றும் பெண்களை கவர்ச்சியான உடையில் காட்டு என்றும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்கு கடுமையான எதிர்ப்புகளை நடிகைகள் கிளப்பியதால் க்ரோக் மூலம் பிகினி உடைக்கு நடிகைகளையோ, சாதாரண பெண்களையோ மாற்ற முடியாத சூழல் உருவானது. இதனால் ஆபாச வீடியோக்களையும் எக்ஸ் தளத்தில் இருந்து அனைத்தையும் எலான் மஸ்க் தூக்கினார்.

GROK டிரெஸ் ஸ்வாப் மூலம் நடிகைகளுக்கு அடுத்த தலைவலி..கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.. | Grok Ai Refused To Depict Women Netizens New Route

டிரெஸ் ஸ்வாப்

ஆனால் தற்போது ஏஐ விட மனித மூளை எந்தளவுக்கு ஆபத்தானது என்பதை காட்டும் விதமாக பல இளைஞர்கள் டிரெஸ் ஸ்வாப் மற்றும் பொசிஷன் சேஞ்ச் ஆப்ஷனை பயன்படுத்தி நடிகைகளை இம்சைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இது முடிந்தது என்று இருந்தால் அடுத்த தலைவலியாக பிகினி உடை அல்லது மோசமான கவர்ச்சி ஆடைகளின் போட்டோக்களை காட்டி நடிகைகளின் புகைப்படங்களுடன் அந்த உடையை இந்த நடிகை உடுத்தும் போட்டோக்களை வெளியிடு என க்ரோக்கையே ஏமாற்றி குரூர புத்தியை காட்டி வருகிறார்கள் இளசுகள்.

மேலும் பொசிஷன் போட்டோக்களை ஆபாசமான ஆங்கிளில் காட்டி நடிகைகளை அந்த கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டும் ஏஐ போட்டோக்களை உருவாகி விஷம விளையாட்டுக்களை விளையாடி வருகிறார்கள் ஒரு குழுவினர். இதுக்கு இல்லையா ஒரு எண்ட் கூறும்படி பலரும் இதனால் புலம்பி வருகிறார்கள்.

GalleryGalleryGallery