எப்படி எல்லாம் கடத்துறாங்க! புது டெக்னிக்கா இருக்கே! போலீஸே ஷாக்
போதை பொருள் கடத்தல்காரர்கள், சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்களை பிடிப்பது போலீசுக்கு அவ்வளவு ஈஸியான காரியம் இல்லை. போலீசுக்கே மாமூல் கொடுத்துவிட்டு சுதந்திரமாக தொழில் செய்பவர்களை பற்றி சொல்லவில்லை. போலீஸ் கண்களில் சிக்காமல் பல வழிகளில் சரக்கு கடத்தி விற்பனை செய்பவர்க்ளை பற்றி தான் இந்த நியூஸ்.
முன்பெல்லாம் சாராயத்தை தான் பாக்கெட்டில் அடைத்து விற்பார்கள். அதன் வியாபாரமும் படுஜோராக நடக்கும். தற்போது சாராயத்திற்கு பதில் வெளிநாட்டு மதுபானங்களை கடத்தி கொண்டு சென்று போலீசிடம் இருவர் சிக்கி இருக்கின்றனர்.
மதுபானத்தை கவரில் ஊற்றிவிட்டு அதில் பாட்டில் முடியையும் உள்ளே போட்டுவிட்டு பாக்கெட்டாக கட்டிவிடுவார்கள். பாக்கெட்டை சுலபமாக மறைத்து கொண்டுசென்றுவிடலாம் என்பதால் தான் இந்த டெக்னீக். அதன் பின் அதை வாங்குபவர் பாக்கெட் உள்ளே இருக்கும் மூடியை பார்த்து அது என்ன பிராண்ட் என அடையாளம் கண்டுகொள்ளலாம்.
தற்போது கள்ளச்சந்தையில் இதுதான் புது டெக்னீக் போல. குஜராத்தில் இப்படி மது கடத்திச்சென்ற இருவரை பைக்குடன் போலீசார் பிடித்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் எதுவும் இல்லை, கையில் பை கூட இல்லை. அதன் பிறகும் சந்தேகம் இருந்ததால் அவர்கள் பைக்கை சோதனை செய்ததில் பெட்ரோல் டேங்க் அடியில் மது பாக்கெட் அதிக எண்ணிக்கையில் கிடைத்து உள்ளது.