குணா பட நடிகை ஜோதிகா, நக்மா தங்கையா!! நக்மா, நடிகை ஜோதிகாவின் சொந்த அக்காவே கிடையாது...
தென்னிந்திய சினிமாவில் அக்கா, தங்கையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நக்மா மற்றும் நடிகை ஜோதிகா. இருவரும் இந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் நடித்து 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து வந்தவர்கள். ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று வளர்ந்து தற்போது படங்களில் மீண்டும் நடித்து வருகிறார். ஆனால் நடிகை நக்மா பல பிரபலங்களுடன் காதலில் இருந்து பின் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகை ஜோதிகா, நக்மா, ரோஷினி
அதாவது நடிகை நக்மா, ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி என்று தான் அனைவரும் அறிந்த ஒன்று. இருவரும் சொந்த சகோதரிகள் கிடையாது. ரோஷினி என்பவர் தான் ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா. நக்மாவுடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள் மட்டும் தான். அப்படி என்றால் ஜோதிகா, நக்மா எப்படி சகோதரிகள் என்பதை இப்போது பார்ப்போம்.
ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி
அதாவது ஸ்ரீ அர்விந்த் பிரதாப்சிங் மொரார்ஜிக்கும் சர்மா கக்ஷிக்கும் பிறந்தவர் தான் நடிகை நக்மா. முதல் கணவரை பிரிந்து சந்தர் சாதனாவை சர்மா கக்ஷி திருமணம் செய்து ஜோதிகாவை பெற்றெடுத்துள்ளார். இது வெளியில் தகவல் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் மஞ்சுமல் பாய்ஸ் படம் டிரெண்ட்டாகிய நிலையில் தற்போது குணா பட நடிகை ரோஷினியின் வரலாறும் வெளியாகியிருக்கிரது. ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி தான் குணா பட நடிகை ரோஷினி.
கமல் ஹாசன் கொடுத்த டார்ச்சர்
ஜோதிகாவை, நக்மா அறிமுகப்படுத்தியதற்கு முன் நடிகை ரோஷினியை தான் அறிமுகம் செய்தார். நவரசநாயகன் கார்த்தியின் சிஷ்யா படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரோஷினி. சில கன்னட படங்களில் நடித்து வந்த ரோஷினி குணா படத்திற்கு பின் திருமணம் செய்து கொண்டு ஆள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்.
மேலும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரோஷினி சினிமாவில் இருந்து விலக கமல் ஹாசன் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.
தன்னை விட ரோஷினி நடிக்கப்போகிறார் என்று தான் ரோஷினிக்கு சரியான காட்சிகளை கமல் கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு என்று பத்திரிகையாளர் ஒருவரும் தெரிவித்திருக்கிறார்.