மதுபோதைக்கு அடிமையாகிய நடிகை காயத்ரி! சுய நினைவில்லாமல் செய்த அத்தனை தவறுகள்..
சினிமாவில் ஒருசில நடிகைகள் மது மற்றும் புகைக்கு அடிமையாவதுண்டு. அப்படி சர்ச்சையில் சிக்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை காயத்ரி சுரேஷ். மலையாள நடிகையாக ஒருசில படங்களில் நடித்து வந்த காயத்ரி, ஜிவி பிரகாஷ் நடித்த 4ஜி படத்தில் நடித்துள்ளார்.
சகாவு, நாம் சில்ரன்ஸ், ஒரே முகம், ஒரு மெக்சிகன் அபரதா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே பல சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு மாட்டிக்கொண்டு வந்தார் காயத்ரி சுரேஷ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் தான் மதுவுக்கு அடிமையான விசயங்களை பகிர்ந்துள்ளார்.
எனக்கு ஒரு காலத்தில் மது போதை பழக்கம் இருந்ததாகவும், அதனால் பல தவறுகளை செய்துள்ளேன் எனவும் தெர்வித்தார். அந்த தவறுகள் என்ன வென்று மட்டும் கேட்காதீர்கள், அது இப்போதைக்கு தேவையில்லாத ஒன்று.
அது சுயநினைவில்லாமல் இருக்கும் போது செய்த தவறுகள். பின் எம் வாழ்க்கை உடல்நிலை, ஆரோக்கியம் போன்றவற்றிற்காக அதை நிறுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார்