கோடிக்கு ஆசைப்பட்டு அந்த மாதிரி நடிக்க மாட்டேன்!! அடம்பிடிக்கும் ஜிவி பிரகாஷ்..

G V Prakash Kumar
By Edward Jun 17, 2022 08:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் ஏ ஆர் ரகுமானின் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலை பாடி சிறு வயதில் இருந்தே பாடகராக அறிமுகமாகியவர் ஜிவி பிரகாஷ். ரகுமானி உறவினர்பிள்ளையாக தற்போது இசையமைப்பாளராக கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகன், தெறி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் இசையமைத்தும், டார்லிங், பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, ப்ரூஸ்லி, நாச்சியார், செம்ம, குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சிலர், ஜெயில் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வந்தார்.

10க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் நடிகர் நடிகைகள் அதனை விளம்பரப்படுத்தி காசு சம்பாதித்து வருகிறார்கள்.

இந்தியளவிலும் இந்த ரம்மி விளையாட்டுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதை எதிர்த்தும் வருகிறார்கள். தற்போது எவ்வளவு கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று கூறி ஆன்லைன் விளையாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியுள்ளார் ஜிவி பிரகாஷ். இதற்கு பலர் பாராட்டியும் வருகிறார்கள்.