விஜய் மீது கடுப்பான ஜி.வி.பிரகாஷ் குமார்!! நடிக்க வரும் முன் நடந்த சம்பவம்..

Vijay G V Prakash Kumar Sudha Kongara Atlee Kumar
By Jai Sep 02, 2026 12:30 PM GMT
Report

ஜி.வி.பிரகாஷ் குமார்

வெயில் படத்தின் மூலம் தன் இசைப்பயணத்தை ஈர்த்தவர் தான் ஜி வி பிரகாஷ்குமார். முன்னனி நடிகர்கள் முதல் இளம் ஹீரோக்கள் படங்கள் வரை தன் இசை மூலம் தேசிய விருதுகளையும் பெற்று வந்தார்.

தற்போது இம்மோர்டல் படத்தில் நடித்துள்ள ஜி. வி, தலைவா படத்தில் விஜய்யுடன் டான்ஸ் ஆடியது பற்றி பகிர்ந்துள்ளார்.

விஜய் மீது கடுப்பான ஜி.வி.பிரகாஷ் குமார்!! நடிக்க வரும் முன் நடந்த சம்பவம்.. | Gv Prakash Kumar Shared His Memories Vijay

அதில், நான் அந்த பாடலில் விஜய்யுடன் ஆடுவதற்கு அவரைப்போலவே ஜீன்ஸ், சட்டை கேட்டேன், ஆனால் ரொம்ப கடுப்பாக இருந்தது. அந்த நடன அசைவும் கடினமாக இருந்தது. அதையே நான் தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை சேர் போட்டு விஜய் பார்த்துக் கொண்டிருந்தார். பின் என்னிடம் நீ நல்லா பிராக்டிஸ் பண்ற என்று சொல்லி பாராட்டினார்.

விஜய்யுடன் இருக்கும்போது ஜாலியாக இருக்கும். நாங்கள் நிறைய நேரம் செலவிட்டுள்ளோம், நான் மீண்டும் விஜய்யுடன் தெறி படத்தில் வேலை பார்த்தேன். இயக்குநர் அட்லீயை ஷங்கரின் உதவியாளராக இருக்கும்போதே எனக்கு பழக்கம், என்னோட, மயக்கம் என்ன படத்தின் இசையைக் கேட்டுவிட்டு ராஜா ராணி படத்தில் மியூசிக் போட வேண்டும் என்று கேட்டு வந்தார். அந்த படம் சிறப்பாக வந்தது. இன்று வரை ராஜா ரானி படம் இசை பேசப்பட்டு வருகிறது.

விஜய் மீது கடுப்பான ஜி.வி.பிரகாஷ் குமார்!! நடிக்க வரும் முன் நடந்த சம்பவம்.. | Gv Prakash Kumar Shared His Memories Vijay

அதன்பின் என் 50வது படமாக மாறி அமைந்தது. அட்லியுடன் வேலை செய்யவே சூப்பரா இருக்கும். தெறி படத்தின் பாடல்கள், பின்னணி இசை எல்லாமே சிறபபக இருந்தது. என் மிகப்பெரிய கமர்ஷியல் படமாக தெறி அமைந்தது.

எனக்கு விஜய்யுடன் பணியாற்ற சரியான நேரம் அமையவில்லை, சுதா கொங்கரா, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்க, அதற்கு நான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் இருவரும் படத்தின் திரைக்கதையை ஒரு வருடம் தேவை என்ற சூழலில் தான் விஜய் பீஸ்ட் படத்தில் நடிக்க சென்றார். சுதா கொங்கரா விஜய்க்கு சொன்னக்கதை உண்மையிலேயே சிறந்தது. ஆனால் அதை தொடர முடியாதது துரதிஷ்டவசமானது. அதே கதையில் மகேஷ்பாபு நடிப்பதாக இருந்தது, ஆனால் அதுவும் கைவிடப்பட்டது என்று ஜி. வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.