யஷ் தீவிரவாதி கிடையாது..பணக்கார குடும்பத்தில் பிறந்தவர!! யஷின் தாய் புஷ்பா எமோஷனல்..

Yash Allu Arjun Gossip Today Toxic
By Jai Sep 02, 2026 07:45 AM GMT
Report

டாக்சிக் 

இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி டாக்சிக் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் படுமோசமான காட்சிகள் இருந்தை வைத்து பலரும் தங்களின் கண்டங்களையும் கருத்துகளையும் முன் வைத்து வருகிறார்.

யஷ் தீவிரவாதி கிடையாது..பணக்கார குடும்பத்தில் பிறந்தவர!! யஷின் தாய் புஷ்பா எமோஷனல்.. | Not A Terrorist Son Of A Bus Driver Yash Mother

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் தந்தை, கேஜிஎஃப் படங்களுக்கு முன் யஷ் என்பவர் யார்? அவர் என்னவாக இருந்தார்? என 2023ல் முன்வைத்த விமர்சனங்களுக்கு, மறைமுகமாக யஷின் தாயார் புஷ்பா மறைமுகமாக பதிலளித்திருந்தார்.

யஷ் தீவிரவாதி கிடையாது

அதில், கேஜிஎஃப் படங்களுக்கு முன் கன்னட சினிமாவில் பேக் டூ பேக் ஹிட் கொடுத்தவர் யஷ், அவர் ஒன்றும் தீவிரவாதி இல்லை, அவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. அவர்மீது வேண்டுமென்றே எதிர்மறையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

யஷ் தீவிரவாதி கிடையாது..பணக்கார குடும்பத்தில் பிறந்தவர!! யஷின் தாய் புஷ்பா எமோஷனல்.. | Not A Terrorist Son Of A Bus Driver Yash Mother

யஷ், மற்றவர்களைப்போல் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. தன் சொந்த முயற்சியால் உயர்ந்த ஒரு பேருந்து ஓட்டுநரின் மகன் அவன். ஒரு தாயாக அவனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். தற்போது, டாக்சிக் படத்தின் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், யஷின் தாயார் புஷ்பாவின் ஆதங்கமான கருத்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.