முட்டுக்கட்டை போட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Tamil TV Serials
By Karthick Raja Sep 02, 2026 05:51 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் கருப்பசாமியாக விளக்கு போட ராஜராஜன் கோவிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவான நிலையில், இன்றைய எபிசோடில் நடக்கவுள்ள பரபரப்பான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.

ராஜராஜன் கோவிலுக்கு செல்லப் போகிறார் என்ற தகவலை அறிந்த சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை தூண்டிவிடுகிறார். இதையடுத்து, ராஜராஜன் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சாமுண்டீஸ்வரி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

முட்டுக்கட்டை போட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Karthigai Deepam Serial Today Episode

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ராஜராஜன், கார்த்திக்கிடம் தகவல் தெரிவிக்கிறார். அதன் பிறகு கார்த்திக் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர். அதன்படி, தன்னுடைய உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று வர வேண்டும் என்று ராஜராஜன் கூறுகிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி அதை நம்பாமல், மருத்துவரையே வீட்டிற்கு வரவழைக்கிறார்.

மருத்துவர் ராஜராஜனை பரிசோதித்து அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்து கொள்கிறார். எனினும், மயில்வாகனம் மற்றும் ரோகினி ஆகியோர் மருத்துவரிடம் பேசி, ராஜராஜனுக்கு ஓய்வு அவசியம் என்று சொல்ல வைக்கின்றனர். இருந்தபோதிலும் சந்திரகலாவுக்கு சந்தேகம் நீங்கவில்லை.

முட்டுக்கட்டை போட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் | Karthigai Deepam Serial Today Episode

ராஜராஜன் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதற்காக, அவர் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து வைக்கிறார் சந்திரகலா. ஆனால் மயில்வாகனம், சந்திரகலாவை திசைதிருப்பி, அந்த பாலை ராஜராஜன் குடித்துவிட்டதாக நம்ப வைத்து அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்.

இந்நிலையில், கார்த்திக்கின் திட்டம் வெற்றியடையுமா? ராஜராஜன் கோவிலுக்கு செல்வாரா? சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது. இதனை தெரிந்துகொள்ள கார்த்திகை தீபம் சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.