வற்புறுத்திய குடும்பத்தினர்!! இளையராஜா கூப்பிட்டும் பாட மறுத்த ஜிவி பிரகாஷின் தங்கை!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகர், பாடகராகவும் திகழ்ந்து வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். அவருக்கு 26 வயதில் பவானி ஸ்ரீ என்ற தங்கையுள்ளார்.
சமீபகாலமாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக விடுதலை படத்தில் கதநாயகியாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் பவானி ஸ்ரீ அளித்த பேட்டியொன்றில், தான் இசைகுடும்பத்தில் இருந்து வந்தாலும் எனக்கு இசைமீதான ஆர்வம் இல்லை என்றும் எனது குடும்பத்தினர் என்னை வற்புறுத்தியும் இசை பயிற்சியை சரியாக மேற்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், இளையராஜ் சார் என்னை ஒரு பாடலுக்கு பாடச்சொல்லி கூப்பிட்ட போது, நான் அந்த அளவிற்கு சிறந்த பாடகி இல்லை என்று கூறிவிட்டேன் என்று பவானி ஸ்ரீ தெரிவித்துள்ளார்.