சைந்தவி எப்போது எனக்கு ஸ்பெஷல்!! விவாகரத்தாகியும் ஜிவி பிரகாஷின் மரியாதை..
G V Prakash Kumar
Divorce
Saindhavi
By Jai
ஜி வி பிரகாஷ் குமார்
வெயில் படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கி தற்போது தேசிய விருது இசையமைப்பாளாராக திகழ்ந்து வருபவர் தான் ஜி வி பிரகாஷ் குமார். கடந்த 2024-ஆம் ஆண்டு தன்னுடைய மனைவி சைந்தவியை விவாகரத்து செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
விவாகரத்து பெற்றாலும் மகளின் எதிர்காலத்திற்காக நண்பர்களாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் அளித்த பேட்டியில் சைந்தவி பற்றி பேசியுள்ளார்.

அதில், சைந்தவியும், அன்வியும் என்னுடைய வாழ்க்கையில் ஸ்பெஷலானவர்கள். பள்ளியில் இருந்தே அவர் எனக்கு தோழி, காதலித்தோம், திருமணம் செய்தோம்.
இப்போது விவாகரத்து பெற்றுவிட்டோம். அன்வியை இப்போது கோ பேரண்டிங் முறையில் நாங்கள் வளர்த்து வருகிறோம். நாங்கள் பிரிந்தாலும் சைந்தவியுடனான நட்பு முக்கியமானது என்று பேசியுள்ளார்.