ஜனநாயகன் படமும் போராட்டம்தான்..பார்த்துட்டு சொல்லுங்க!! அமீருக்கு எச் வினோத் பதில்..
ஜனநாயகன்
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் கடைசி படமாக இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் தான் ஜனநாயகன். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கடந்த 6 மாத போராட்டத்திற்கு பின் ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் அமீர் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், கசிந்திருக்கும் ஜனநாயகன் படக் காட்சியிலும் இஸ்லாமியர்கள்தான் தீவிரவாதிகளா? இதுதான் தங்களின் அரசியலா? எப்போதுதான் மாறும் இந்த மனநிலை என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலாக இயக்குநர் எச் வினோத் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலரில் முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டது குறித்து ஏராளமானோர் விமர்சனங்களை முன் வைக்கிறார்களே, அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அமீருக்கு எச் வினோத்
அதற்கு எச் வினோத், இந்த பிரச்சனையை முதலில் அமீர் சார் தான் எழுப்பினார். ஒருசில காட்சிகளை பார்த்துவிட்டு அவர் சொல்லியிருக்கிறார். ஜனநாயகன் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக நாங்கள் காண்பிக்கவில்லை. படத்தை பார்த்துவிட்டு அமீர் சார் கருத்து சொல்ல வேண்டும். அமீரை போல் யாரெல்லாம் இக்கருத்தை சொன்னார்களோ எல்லாரும் படத்தை பாருங்கள். அப்போதுதான் அது போல் நாங்கள் காட்டவில்லை என்று உங்களுக்கு புரியும் என்று கூறியிருக்கிறார்.

இதனையடுத்து அமீர், நண்பர் எச் வினோத் அவர்களுக்கு நிச்சயம் உங்கள் படத்தை பார்த்துவிட்டு நான் விளக்கம் சொல்கிறேன், ஆனால் என் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டக் களத்தில் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் வேளையில் எனக்கு படம் பார்க்க மனமில்லை என்று அமீர் குறிப்பிட்டுள்ளார்.