டேட்டூ கூட என்னால் குத்தமுடியாது!! அம்மா ஹார்மோன் ஊசிப்போட்டது உண்மையா!! ஹன்சிகா ஓப்பன் டாக்

Hansika Motwani Indian Actress Tamil Actress
By Edward May 17, 2023 12:30 AM GMT
Report

மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி டாப் இடத்தினை பிடித்தவர் நடிகை ஹன்சிகா. சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா, தங்களின் திருமண வீடியோவில் பல விசயங்களை ஓப்பனாக கூறியிருக்கிறார். அதில் தான் சிறுவயதில் நடித்து வந்த போது ஹார்மோன் ஊசியை என் அம்மா போட்டார்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

டேட்டூ கூட என்னால் குத்தமுடியாது!! அம்மா ஹார்மோன் ஊசிப்போட்டது உண்மையா!! ஹன்சிகா ஓப்பன் டாக் | Hansika About Hormonal Injections Rumors

அதை நினைவுப்படுத்தி கூறிய ஹன்சிகா, இந்த செய்தி எனது 21வது வயதில் முட்டாள்தனத்தை போல் எழுதினார்கள். அப்படி நான் செலுத்தியிருந்தால் இப்போதும் என்னால் அதை எடுத்திருக்கமுடியும். இதுகுறித்து என் அம்மா வருத்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், அதுமட்டும் உண்மையாக இருந்திருந்தால் டாடா, பிர்லாவை போல் நானும் கோடிஸ்வரியாக இருப்பேன். நான் பஞ்சாபி என்பதால் எங்கள் மகள்கள் 12 முதல் 16 வயதில் பெரியவள்களாக வளர்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான் எனக்கு என்று தெரிவித்திருந்தார்.

டேட்டூ கூட என்னால் குத்தமுடியாது!! அம்மா ஹார்மோன் ஊசிப்போட்டது உண்மையா!! ஹன்சிகா ஓப்பன் டாக் | Hansika About Hormonal Injections Rumors

தற்போது ஹான்மோன் ஊசி போட்ட விவகாரம் குறித்து பேசிய ஹன்சிகா, இன்றுவரையில் என்னால் ஊசியே போட்டுக்கொள்ள முடியாது. ஏன் உடலில் டேட்டூவை கூட என்னால் போட்டுக்கொள்ள முடியாது.

அதற்கு காரணம் ஊசி என்றால் எனக்கு அவ்வளவு பயம் என்றும் ஒரு தாய் ஏன் இப்படிப்பட்ட விசயத்தை செய்யவேண்டும். இதுபோன்ற செய்திகளை பரப்புவதால் மக்கள் எங்களை பார்த்து பொறாமைப்படுவதாகவே நினைக்கிறேன் என்றும் ஹன்சிகா வெளிப்படையாக கூறியிருக்கிறார்.