அரண்மனை வீட்டில் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் நடிகை ஹன்சிகா! யாருக்கு தெரியுடமா?

actress wedding hansika
By Jon Mar 12, 2021 09:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இதையடுத்து விஜய், சூர்யா, சிம்பு, விஷால் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். இதையடுத்து உடல் எடையை கூட்டியதால் படவாய்ப்பினை இழந்து சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்தார்.

தற்போது தீவிர உடல் எடையை குறைத்து ஒல்லியான ஹன்சிகா தற்போது தனது 50 வது படமான மஹா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முன்னாள் காதலன் நடிகர் சிம்பு சிறப்பு ரோலில் நடித்தும் வருகிறாராம். இந்நிலையில் ஹன்சிகாவின் வீட்டில் திருமணக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்களாம்.

ஆனால் திருமணம் ஹன்சிகாவிற்கு இல்லையாம், அவரது அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்குதானாம். ராஜாஸ்தானில் நடைபெறும் அத்திருமணம் ராஜஸ்தான் உதய்பூரில் இருக்கும் மிகப்பெரிய அரண்மனையை 2 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து அங்கு திருமணம் செய்யப்போவதாக இருக்கிறதாம். தற்போது திருமண வேலையில் ஹன்சிகா மோத்வானி பிஸியாக இருந்து வருகிறாராம்.