திருமணத்திற்கு பின் குறையாத கிளாமர் லுக்!! நடிகை ஹன்சிகா வெளியிட்ட ஷார்ட் ட்ரெஸ் போட்டோஷூட்..
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. சூர்யா, விஜய், விஷால், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்சிகா, சிம்புவுடன் காதலில் இருந்து வந்தார்.
சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிம்புவை பிரிந்து நடிப்பில் கவனம் செலுத்தினார் ஹன்சிகா. உடல் எடையை ஏற்றியதால் வாய்ப்புகள் குறைந்த நிலையில், கடின உடற்பயிற்சி மூலம் கிளாமர் லுக்கிற்கு மாறி வாய்ப்பிளக்க வைத்தார்.
சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா. அதன்பின் கணவருடன் நேரத்தை செலவிட்டும் படங்களில் நடித்தும் வரும் ஹன்சிகா போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
திருமணத்திற்கு பின் நடிகைகள் பெரும்பாலும் கிளாமர் லுக்கை குறைப்பது வழக்கம். ஆனால் திருமணத்திற்கு பின் குறையாத கிளாமரில் போட்டோஷூட் எடுத்து வருகிறார் ஹன்சிகா. தற்போது குட்டையாடையணிந்து ரசிகர்களை மிரட்டி ஒரு போட்டோஷூட் எடுத்துள்ளார் ஹன்சிகா மோத்வானி.