தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி! திருமணத்திற்கு முன் இப்படியொரு ஆட்டமாடிய நடிகை ஹன்சிகா
ஹன்சிகா
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா. இப்படத்தினை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து டாப் நடிகையாக இருந்து வந்தார்.
இடையில் சிம்புவுடன் காதலில் இருந்து பின் பிரிந்துவிட்டார். உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ஹன்சிகா படவாய்ப்புகள் இல்லாமல் சில காலம் காணாமல் போனார்.
உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி அவரது 50 வது படமான மஹா படத்தில் நடித்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் வரும் டிசம்பர் 1 ஆம்தேதி ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணமாகவுள்ளது.

பேச்சிலர் பார்ட்டி
பிரம்மாண்ட அரண்மனையில் திருமணத்திற்காக ஏற்பாடுகளும் சடங்குகளும் நடைபெறவுள்ளது.
தற்போது தனது நெருங்கி தோழிகளுக்கு வெளிநாட்டில் பேச்சிலர் பார்ட்டியை கொடுத்திருக்கிறார் ஹன்சிகா. கிளாமர் ஆடையில் அவரது தோழிகளுடன் ஆட்டம் பாட்டம் என்று கும்மாளம் போட்ட வீடியோவை பகிருந்திருக்கிறார் ஹன்சிகா.