ஹன்சிகா விவாகரத்து உண்மைதானா.. கணவர் இல்லாமல் தனியாக வந்த நடிகை!
வைரல் வீடியோ தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இன்று பெரிதும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
நடிகை ஹன்சிகா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொஹைல் கத்துரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
பாலிவுட் வட்டாரத்தில் இதுகுறித்து தொடர்ந்து பேசப்படுகிறது. ஹன்சிகா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிவிட்டதால், இவர்களுடைய விவாகரத்து செய்தி உண்மையா என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஹன்சிகா தனது கணவர் இல்லாமல் தனியாக கொண்டாடியுள்ளார். அவர் தனியாக வந்து விநாயகர் சிலையை எடுத்து செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..