நான் குடிச்சிட்டு கார் ஓட்டவில்லை! ஒரே இரவில் பேரை கெடுத்துட்டாங்க! பிக்பாஸ் ஆரதியின் கணவர்

biggbosstamil tamilactor harathi ganeshkar
By Edward Mar 08, 2022 10:25 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் வரிசையில் இருப்பவர் பலர். அதில் க்யூட் ஜோடியாகவும் காமெடி நட்சத்திரங்களாக இருப்பர்கள் கணேஷ்கர் - ஆரத்தி ஜோடி. சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தின் போது கணேஷ்கர் ஒரு நிகழ்ச்சிக்காக ஆரத்தியை விட்டுவிட்டு சென்னை பட்டினபாக்கம் பீச் ரோடு வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.

அங்கிருந்த வேகத்தடையை கவனிக்காத கணேஷ்கர் வேகமாக ஏற்றிய போது கார் கட்டுப்பாட்டினை இழந்து ரோட்டின் ஒரு பகுதியில் மோதியுள்ளது. இதனால் பின்னல் வந்த இரண்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கிழே விழுந்துள்ளனர். இதையடித்து கணேஷ்கர் குடித்துவிட்டு கார் ஓட்டி தப்பி ஓடிவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியது. இதுகுறித்து தனக்கு தெரியாது என்று ஆரத்தி கூறியிருந்தார்.

தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணேஷ்கர் நலமுடன் இருந்து பேட்டி கொடுத்துள்ளார். அப்பகுதியில் எனக்கு அப்படி ஆனதும் அங்கிருந்தவர்கள் என்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் எனக்கு வசதி இல்லை என்பதால் என் நண்பருக்கு கால் செய்து தனக்கு தகுந்தார் போல் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்க கூறினேன். இதுபற்றி ஆரத்திக்கு நான் கூறாமல் மறைத்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் நான் குடித்துவிட்டு காரை ஓட்டவில்லை.

ஏர் பலூன் கார் வேகத்தடையில் மோதியபோது வெடித்தது. இதனால் எனக்கு நெஞ்சுப்பகுதியில் காயம் ஏற்பட்டு கார் தடுமாறிவிட்டது அவ்வளவு தான் என்றார். தற்போது எனக்கு உடலில் ஏற்கனவே பிரச்சனை இருப்பதால் இப்போது இந்த மருத்துவமனையில் அனுமதி பெற்று வருகிறேன் எனவும் ஆரத்தியுடன் நேர்காணலில் கூறியுள்ளார்.