ஹர்திக் பாண்டியாவின் புது காதலி மஹைகா யார் தெரியுமா? பல கோடிக்கு சொந்தக்காரி!
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன், இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார்.
சமீபத்தில், பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் மாடல் நடிகை மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் காணப்பட்டார்.
இருவரும் ஒரே காரில் இறங்கியது முதல் ஜோடியாக கைக்கோர்த்தபடி சென்றிருந்தனர். தற்போது, இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர்.
யார் தெரியுமா?
தன்னுடைய புது காதலி மஹிகா சர்மாவுடன் ஹர்திக் இருக்கும் சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இவரது காதலி குறித்தும் அவரது சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, 24 வயதான மஹைகா சர்மா மாடல் மற்றும் நடிகை ஆவார். பிட்னஸ் குறித்தும் இன்ஸ்டாகிராமில் அதிகம் வீடியோக்களை பதிவிடுபவர். இவர் நாட்டின் பல பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்த ஆடைகளுக்கு மாடலாக இருந்துள்ளார்.
Tanishq, Vivo, Uniqlo உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான இந்தியன் பேஷன் விருது விழாவில் சிறந்த மாடல் விருதை பெற்றுள்ளார். மாடலாகவும், பிட்னஸ் மாடலாகவும் அறியப்படும் இவருக்கு சுமார் ரூ.3.20 கோடி சொத்து மதிப்பு உள்ளது.