32வது பர்த்டே!! மஹிகா சர்மாவுடனான உறவை கர்ஃபார்ம் செய்த ஹர்திக் பாண்டியா..
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் ஹர்திக் பாண்டியா தன்னுடைய புதிய காதலியுடன் காரில் இறங்கி செல்லும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறது.
ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார் ஹர்திக். அதன்பின் ஒருசில மாடல் நடிகையுடன் இணைத்து பேசப்பட்டு வந்தது.
சமீபத்தில், பாலிவுட் சினிமாவில் நடித்து வரும் மாடல் நடிகை மஹிகா சர்மாவுடன் ஹர்திக் பாண்டியா மும்பை விமான நிலையத்தில் வந்துள்ளார். இருவரும் ஒரே காரில் இறங்கியது முதல் ஜோடியாக கைக்கோர்த்தபடி சென்றிருந்தனர்.
மஹிகா சர்மா
இந்நிலையில், தன்னுடைய புது காதலி மஹிகா சர்மாவுடன் 32வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. காதலியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்டியா. மேலும் தன் மகன் அகஸ்தியாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா.



