ஹர்திக் பாண்டியாவின் இந்த வாட்ச் இத்தனை கோடியா!! வைரலாகும் புகைப்படம்...
ஹர்திக் பாண்டியா
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா தற்போது ஆசிய கோப்பை 2025 தொடரில் ஆடவிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க ஹர்திக் பாண்டியா, விலையுயர்ந்த ஆடம்பர கைக்கடிகாரங்களை வாங்கி வைப்பதில் ஆர்வம் கொண்டவர். அப்படி ஹர்திக் உலகில் அதிக விலையுயர்ந்த பிராண்ட் வாட்ச்களை வாங்கி வருகிறார்.
ஆசிய கோப்பை 2025 போட்டிக்கான பயிற்சியின் போது அவர் கட்டியிருந்த ரிச்சர்ட் மில்லே RM 2704 பிராண்ட் வாட்ச்-ஐ அணிந்திருந்தார்.
இந்த வாட்ச் உலகம் முழுவதிலும் 50 வாட்ச்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இது முதலில் ரஃபேல் நடாலுக்காக வடிவமைக்கப்பட்டது. இந்த வாட்ச் ரூ. 20 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
Richard Mille
அதேபோல் சூப்பர் 4 சுற்று போட்டியில் ஹர்திக் பாண்டியா அணிந்த வாட்ச் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. Richard Mille RM 35-02 Baby Blue பிராண்ட் வகையை சேர்ந்த இந்த வாட்ச் ரீடைல் விலை ரூ. 2.10 கோடியாம். மார்க்கெட் விலையில் இதன் மதிப்பு சுமார் ரூ. 4 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்று பல விலையுயர்ந்த வாட்ச் கலெக்ஷனை கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா வாங்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.