நீ அப்படித்தான் அனுப்புவ!! நடிகை லாஸ்லியாவை பார்த்து அந்த வார்த்தை!! வைரல் வீடியோ..
இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் லாஸ்லியா மரியநேசன். இந்நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் இருந்து பின் பிரிந்த லாஸ்லியாவுக்கு அவரது தந்தையின் மரணம் அதிர்ச்சியை கொடுத்தது.
அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா, ஒருசில படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் ஜம்ப் கட்ஸ் ஹரி பாஸ்கருடன் Mr.Housekeeping என்ற படத்தில் நடித்துள்ளார் லாஸ்லியா.
Mr.Housekeeping டிரைலர்
இப்படத்தின் டிரைலர் ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட ரயானும் இப்படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் டிரைலரின் இடம்பெற்றுள்ள ஒரு டயலாக் லாஸ்லியா ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
லாஸ்லியாவை பார்த்து கதாநாயகன் ஹரி பாஸ்கர், ஒரு நாள் குட்டியா கவுன் போட்டுக்கொண்டு போட்டோ அனுப்புனியே, அதை எல்லோருக்குமா அனுப்புன என கேட்க, அதற்கு ஆமாம் என்று லாஸ்லியா சொல்வார்.
அதற்கு ஹரி பாஸ்கர், ஐட்டம் நீ அப்படித்தான் அனுப்புவ என்று கூறி லாஸ்லியா பளார் என்று கோபத்தில் கன்னத்தில் கதாநாயகனை அடிப்பார். இதற்கு லாஸ்லியா ரசிகர்கள், ஹரி பாஸ்கர் ஸ்டைலில் இன்னமும் இவனுங்க திருந்தவே இல்ல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.