வாரிசு நடிகரா? உறவினர் பையனா? இரண்டாம் திருமணத்திற்கு ரெடியாகும் நடிகை சமந்தா..
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் நடிகை சமந்தா. இதனை தொடர்ந்து அதன் தெலுங்கு ரீமேக்கில் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த சமந்தா மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழில் பாணா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாகினார்.
கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் தனியாக வந்த சமந்தா, மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந்தார். அதிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் சமந்தா படங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி நடித்தும் வருகிறார்.
பாலிவுட் படத்தில் அறிமுகமாகியுள்ள சமந்தா கிளாமர் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா, தனியாக இருப்பதை நினைத்து அவரது வீட்டில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும்படி அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.
மகள் தனியாக இருப்பதை விரும்பாத அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைவில் தங்களது நெருங்கிய உறவினர் வீட்டுப் பையன் இருவரை சமந்தாவுக்கு திருமண செய்து வைக்க முயற்சிகள் செய்து வருகிறார்களாம். மேலும் நடிகை சமந்தா வாரிசு நடிகர் ஒருவருடன் நெருக்கமாகவும் பழகி வருகிறார் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.
இப்படி இருவரில் சமந்தாவின் சாய்ஸ் யாராக இருந்தாலும் அதை பெற்றோர்களும் ஏற்ற தயாராக இருக்கிறார்களாம். எப்படியாவது தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் அவர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.