ஜெயம் ரவியிடம் அட்வைஸ் கேட்ட அஜித்? உண்மையை கேட்டு பதறிய நடிகர்..
தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகை ஜெயம் ரவி. இப்படத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், தனிஒருவன், அடங்கமறு, வனமகன், பேராண்மை உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராகினார். தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் அருண் மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் முக்கிய ரோலில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், அஜித் உங்களிடம் அட்வைஸ் கேட்டாராமே என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஜெயம் ரவி, இந்த கேள்வியே ரிஜெக்ட் தான். அவர் தல எங்கிட்ட எப்படி. இதை செய்தியை எழிதியவனே சிரித்து தான் எழுதி இருப்பான் என்று கூறியும் அஜித் மீது மரியாதை இருக்கிறது. நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் அஜித் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.