என் கணவர் குணமாகிட்டு வராரு!! தர்மேந்திராவின் 2வது மனைவி ஹேமா மாலினி காட்டம்..

Gossip Today Actors Bollywood
By Edward Nov 11, 2025 07:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

தர்மேந்திரா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

என் கணவர் குணமாகிட்டு வராரு!! தர்மேந்திராவின் 2வது மனைவி ஹேமா மாலினி காட்டம்.. | Hema Malini Blasts False News About Dharmendra

இதனை அறிந்த தர்மேந்திராவின் 2வது மனைவியும் நடிகையுமான ஹேமா மாலினி, வதந்தி தகவல் குறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

அதில், நடந்து வருவது மன்னிக்க முடியாதது! சிகிச்சை பெற்று குணமடைந்து வரும் ஒருவரைப்பற்றி பொறுப்பான ஊடகங்கள் எப்படி தவறான தகவல்களை பரப்ப முடியும்? இது மிகவும் மரியாதை குறைவானது - பொறுப்பற்றது.

குடும்பத்திற்கும் அதன் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் உரிய மரியாதை கொடுங்கள் என்று ஹேமா மாலினி தெரிவித்துள்ளார்.