திரிஷா, சமந்தா முதல் ஸ்ரீலீலா வரை!! 15 நடிகைகளுடன் நடித்த நடிகர் இவர்தான்..
15 நடிகைகள்
சினிமாவில் ஒருசில நடிகர்கள் தான் பல நடிகைகளுடன் ஜோடிப்போட்டு நடித்திருப்பார்கள். அப்படி தன்னைவிட சீனியர் நடிகைகள், தன்னைவிட ஜூனியர் நடிகைகள் என 15 டாப் நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார் ஒரு நடிகர்.

நடிகைகளான காஜல் அகர்வால், திரிஷா, சமந்தா, தமன்னா, பிரியாமணி, ஜெனிலியா, சதா, ஹன்சிகா, நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மூத்த நடிகைகளுடனும், இளம் நடிகைகளான ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி ஷெட்டி, ஸ்ரீலீலா போன்ற நடிகைகளுடம் இந்த நடிகர் நடித்துள்ளார்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் நிதின் தான். 2002ல் வெளியான ஜெயம் படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த நிதின், மொத்தம் 35 படங்களில் நடித்து, 8 ஹிட் படங்களை கொடுத்தார். பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் பல நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நிதின்.

அப்படி, ஜெயம் படத்தில் சதாவுடனும், ஸ்ரீ ஆஞ்சநேயம் படத்தில் நடிகை சார்மியுடனும், நடிகை ஜெனிலியாவுடன் Sye என்ற படத்திலும் நடித்துள்ளார் நிதின்.

அதன்பின் 2005ல் வெளியான அல்லாரி புல்லோரி என்ற படத்தில் நடிகை திரிஷாவுடனும், 2008ல் வெளியான Aatadista படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் நடித்து தோல்வியை கண்டார்.

Seeta Ramula Kalyanam Lankalo என்ற படத்தில் நடிகை ஹன்சிகாவுடனும், துரோணா என்ற படத்தில் நடிகை பிரியாமணியுடனும், இஷ்க் என்ற படத்தில் நடிகை நித்யா மேனனுடனும் நடித்தார் நிதின்.

2016ல் 'அ ஆ' என்ற படத்தில் நடிகை சமந்தாவுடன் நடித்து ஹிட் கொடுத்தார். அதன்பின் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் பீஷ்மா என்ற படத்திலும், நடிகை ரகுல் ப்ரீத் சிங்குடன் செக் என்ற படத்திலும், ரங் தே என்ற படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுடனும் நடித்திருக்கிறார்.
கடந்த 2021ல் வெளியான மேஸ்ட்ரோ என்ற படத்தில் நடிகை தமன்னாவுடனும், Macherla Niyojakavargam மீண்டும் கீர்த்தி சுரேஷுடன் நடித்து தோல்வியை கண்டார்.

தற்போதைய இளம் நடிகையாக திகழும் நடிகை ஸ்ரீலீலாவுடன் ராபின் ஹூட், எக்ஸ்ட்ராடினர் என்ற படங்களிலும் நடித்து படுதோல்வியை கண்டார் நிதின். இப்படி 15 நடிககளுடன் ஜோடிப்போட்டு நடித்த ஒரே நடிகராக நிதின் திகழ்கிறார்.