தலைக்கணத்தால் அழிந்து போகும் நடிகர்கள்.. எவ்வளவு பட்டாலும் திருந்தாத மனம் தான்..
சினிமாத்துறையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது முன்னணி இடத்தினை பிடிக்க பலர் போராடுவார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைத்து பயன்படுத்தாலும் உல்லாசம், ஈகோ, தனிப்பட்ட வாழ்க்கை என்று பலர் தோல்வியை சந்திக்கிறார்கள்.
அப்படி வாய்ப்பு இருந்தும் தோற்றுப்போனவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் சுப்ரமணியபுரம், சென்னை 28 உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய கைக்கொடுத்து தூக்கிய படமாக அமைந்தது நடிகர் ஜெய்-க்கு.
முதலில் நடிகை அஞ்சலியுடன் காதலில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகை வாணி போஜன் இருக்கும் இடம் எல்லாம் அவர் தான் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. வாணி போஜனுடன் கதை சொல்ல போகும் இயக்குனர்களின் குறையே இதுவாகத்தான் இருக்கிறதாம்.
ஆனால் அதை முற்றிலும் கண்டுக்கொள்ளாமல் உல்லாசமாக இன்று வரை போதை, நடிகைகளுடன் சகவாசம் என்று இருந்து வருகிறார். இவரை போன்று, நடிகர் அதர்வா, நகுல், நிதின் சத்யா, அட்டக்கத்தி தினேஷ், விமல், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் சந்தேகத்தின் பிடியில் தமிழ் சினிமாவில் தோன்றி வருகிறார்கள்.