படப்பிடிப்பில் பிரபல நடிகையிடம் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தை.. பேச்சே வராமல் அதிர்ந்த மோகன்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பிரியங்கா அருள் மோகன்.
தற்போது கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படமும் டான் படமும் ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது பிரியங்கா பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்று விஜய்யுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
அப்போது தன்னிடம் விஜய் கூறி ஒரு வார்த்தையால் ஷாக்கானதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். டாக்டர் படத்தில் சிறப்பாக நடிப்பு மற்றும் பாடல்களிலும் சிறப்பாக இருந்தது என்றும் தெலுங்கில் ஸ்ரீகாரம் படத்தில் நடித்திருந்தேன்.
அந்த படத்தின் ஹே அப்பாயி என்ற பாடலில் சிறப்பாக நடனமாடியதாகவும் அடிக்கடி அதை பார்ப்பேன் என்றும் கூறினார்.
எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த பாடல்களை எல்லாம் பார்ப்பீர்களா என்று கேட்க ஆமாம் அடிக்கடி பார்ப்பேன் என்று கூறினார் விஜய்.
எனக்கு இதை கேட்டு ஒரு நிமிடம் பேச்சே வரவில்லை. பின் என் அடுத்த படம் பற்றியும் கேட்டு பல விசயங்களை பேசியதாகவும் பிரியங்கா மோகன் தெரிவித்துள்ளார்.