உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள் யார் யார்!! இத்தனை கோடியா?
உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். ஆனால் உலகிலேயே இருக்கும் சினிமாத்துறையில் எந்த படத்திற்கு அதிக சம்பளம் வாங்கிய பிரபலங்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.

மார்கோட் ராபி
இந்த லிஸ்ட்டில் 6வது இடத்தில் இருக்கிறார் பார்பீ பட நடிகை மார்கோட் ராபி. The Wolf of Wall Street என்ற படத்தில் நடிக்க 5 லட்சம் டாலர் வாங்கியுள்ள மார்கோட், பார்பீ படத்தில் நடிக்க சுமார் 50 மில்லியன் டாலர் சம்பளமாக வாங்கியிருக்கிறார். இவ்வளவு சம்பளம் வாங்கிய நம்பர் 1 நடிகையாகவும் மார்கோர் ராபி திகழ்ந்து வருகிறார்.

டுவைன் ஜான்சன்
ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார். 2001ல் வெளியான தி மம்மி ரிட்டர்ன்ஸ் படத்திற்காக 5.5 மில்லியன் டாலர் சம்பளமாக வாங்கியவர் ரெட் ஒன் படத்தில் நடிக்க சுமார் 50 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்றுள்ளார்.
ராபர்ட் டவுனி ஜூனியர்
டோனி ஸ்டார்க் என்று அனைவராலும் அறியப்படும் ராபர்ட் டவுனி ஜூனியர் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் 4வது இடத்தில் இருக்கிறார். Avengers: Endgame படத்திற்காக சுமார் 75 மில்லியன் டாலர் சம்பளமாக பெற்றுள்ளார் ராபர்ட்.

ஜானி டெப்
2010ல் வெளியான A Nightmare on Elm Street என்ற படத்திற்காக ஜானி டெப் சுமார் 1200 டாலர் சம்பளமாக பெற்றிருந்தார். அதன்பின் Pirates of the Caribbean படங்களில் நடிக்க சுமார் 90 மில்லியன் டாலர் சம்பளமாக வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு பாகத்திற்கும் சுமார் 90 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
வில் ஸ்மித்
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் டாப் 2வது இடத்தில் இருப்பவர் தான் நடிகர் வில் ஸ்மித். 1992ல் வெளியான Where the Day Takes You படத்திற்காக 5 லட்சம் டாலர் சம்பளம் வாங்கினார்.
அதன்பின் வெளியான MIB 3 படத்திற்காக சுமார் 100 மில்லியன் டாலர் சம்பளமாக வாங்கியிருக்கிறார். கடந்த 2024ல் வெளியான Bad Boys: Ride or Die படத்திற்காக சுமார் 25 மில்லியன் டாலர்கள் மட்டுமே சம்பளமாக பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாம் குரூஸ்
உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருப்பவர் தான் நடிகர் டாம் குரூஸ். 1983ல் வெளியான Risky Business படத்திற்காக சுமார் 7 லட்சம் டாலர் சம்பளமாக வாங்கினார்.
இதனையடுத்து 2022ல் வெளியான Top Gun: Maverick படத்திற்காக சுமார் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சம்பளத்தை வாங்கியிருக்கிறார். இதனையடுத்து கடந்த 2025ல் வெளியான Mission: Impossible – The Final Reckoning படத்திற்காக சுமார் 100 மில்லியன் முதல் 150 மில்லியன் டாலர் வரை சம்பளமாக பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.