இந்தி பிக்பாஸையே தமிழில் பேச வைத்து அசத்திய ஸ்ருதிகா.. வைரலாகும் வீடியோ..

Viral Video Bigg Boss Shrutika
By Edward Oct 22, 2024 02:30 PM GMT
Report

பிக் பாஸ் 18 சீசன்

கடந்த சில வாரங்களுக்கு முன் எப்படி பிக் பாஸ் 8 தமிழில் துவங்கியதோ, அதே போல் ஹிந்தியில் பிக் பாஸ் 18 சீசன் பிரமாண்டமாக துவங்கியது. இதில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஸ்ருதிகா போட்டியாளராக கலந்துகொண்டார்.

இந்தி பிக்பாஸையே தமிழில் பேச வைத்து அசத்திய ஸ்ருதிகா.. வைரலாகும் வீடியோ.. | Hindi Biggboss Promo Viral Because Of Shrutika

இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிலேயே கலந்துகொள்ளலாமே, ஏன் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஸ்ருதிகா பெர்ஃபார்மன்ஸ்

ஆனால், ஹிந்தி பிக் பாஸில் தற்போது பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் ஸ்ருதிகா. பலரையும் ரசிக்க வைத்து கொண்டு இருக்கிறார். இதனால் ஹிந்தி பிக் பாஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் பிக் பாஸ் விட ஹிந்தி பிக் பாஸ் பார்க்கலாம் போலயே என பலரும் கமன்ட் செய்து வருகிறார்கள். ஹிந்தி பிக் பாஸில் இருந்தாலும் அவ்வப்போது ஸ்ருதிகா தன்னை மீறி தமிழில் பேசி விடுகிறார்.

இந்தி பிக்பாஸையே தமிழில் பேச வைத்து அசத்திய ஸ்ருதிகா.. வைரலாகும் வீடியோ.. | Hindi Biggboss Promo Viral Because Of Shrutika

இந்நிலையில் ஸ்ருதிகா, இந்தி பிக்பாஸையே தமிழில் பேச வைத்திருக்கிறார். அதில் உங்கள் கணவர் அர்ஜுன் பேங்காக் ட்ரிப் செல்ல ஸ்பான்ஸர் செய்திருக்கிறார். இந்தியில் பிக்பாஸ் ஸ்ருதிகாவிடம் கூறியிருக்கிறார்.

இதற்கு ஸ்ருதிகா, நீ எங்கயுமே சென்னையைவிட்டு போகக்கூடாது என்று தமிழில் பிக்பாஸுக்கு பேச கற்றுக்கொடுத்திருக்கிறார். தற்போது ஸ்ருதிகாவின் இந்த செயல் இந்தி பிக்பாஸ் ரசிகர்களையும் கவர்ந்திழுத்து வருகிறது.