ரஜினி படத்தால் என் வாழ்க்கையே பாலா போயிருக்கும்!! புலம்பிய நடிகர் நெப்போலியன்
90-ஸ் காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் சிறந்த நடிகராக திகழ்ந்து வந்தவர்களில் ஒருவர் நடிகர் நெப்போலியன். பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான கிழக்குச்சீமையிலே படத்தில் அட்டகாசமான நடிப்பை காட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நெப்போலியன் வில்லன் ரோலில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி பல படங்களில் வில்லன் ரோலில் நடித்து வந்த நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் எஜமான் படத்தில் நெப்போலியன் வில்லன் ரோலில் நடித்திருப்பார்.
அப்படித்தின் போது நடந்த சில விசயங்களை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியொன்றில், எஜமான் படம் வெளியான சமயத்தில் தனக்கு பெண் பார்க்கும் படலம் ஏற்பட்டு செய்யப்பட்டது. என் மனைவியிடம் மாப்பிள்ளை யார் என்று விசாரிக்க அவர் ஒரு நடிகர் அவர் பெயர் நெப்போலியன் என்று கூறியுள்ளனர் பெற்றோர்கள்.
உடனே அவர் ஐய்யோ எஜமான் படத்தில் கருவில் குழந்தையை அழிக்க நினைத்தவன் கூட போய் என்னை வாழச்சொல்றீங்களே என்று என்னை திருமணம் செய்ய வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதன்பின் வெளியில் நெப்போலியனை பற்றி விசாரித்து தன்னை திருமணம் செய்ய ஒற்றுக்கொண்டார் என நெப்போலியன் தெரிவித்துள்ளார்.