ஒரே நேரத்தில் தனுஷ், சிம்புவுடன்!! 27 வயதில் சினிமாவைவிட்டு விலகிய பிரபல நடிகை..
ரிச்சா கங்கோபாத்யாய்
நடிகர் தனுஷின் மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். 2010 -2013 கால இடையில் மூன்றே ஆண்டுகளில் 9 படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, பெங்காலி என்ற 3 மொழிகளில் நடித்துள்ள ரிச்சா, தனுஷின் மயக்கம் என்ன, சிம்புவின் ஒஸ்தி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.
டாப் இடத்தில் இருந்தவர் 2013ல் தன்னுடைய 27 வயதில் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்து வெளியேறினார். ரிச்சாவிற்கு மார்க்கெட்டிங் துறையில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசையால் சினிமாவில் இருந்து விலகி தன் கனவான படிப்பில் ஆர்வம் காட்டினார்.

அதன்பின் 2017ல் அமெரிக்கா திரும்பிய ரிச்சா, செயிண்ட் லூயிஸ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் ஒலின் பிசினஸ் ஸ்கூலில் தன்னுடைய எம் பி ஏ படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
அதன்பின் பின் தன் ஜோ லங்கெல்லாவை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது ரிச்சாவிற்கு ஒரு ஆண் குழந்தையுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.