கோடை விடுமுறை விட்டாச்சு!! அமைதியான சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ...
கோடைவிடுமுறை
மக்கள் தங்களின் குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் கோடை விடுமுறையை கழிக்கவும் தயாராகிவிட்டார்கள். பெரும்பாலானோர் கொஞ்சமும் யோசித்துவிடாமல் மலைப்பிரதேசங்களுக்கு படையெடுப்பார்கள்.

கடும் கோடை வெப்பத்தை சமாளிக்க இவ்வாறு செய்வதால் சில விளைவுகளும் கடும் கூட்ட நெரிசல்களும் ஏற்படும். இப்படியான சூழலில் இருந்து தப்பிக்க கூட்ட நெரிசல் இல்லாத அமைதியான சுற்றுலாத் தலங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
சுற்றுலாத் தலங்கள்
கோடைவிடுமுறைக்கு ஏற்ற சுற்றுலா தலமாக கோகர்ணா திகழ்கிறது. கர்நாடகாவிலுள்ள இந்த கடற்கரை பக்கத்தில் ஓம் பீச், குட்லே பீச் போன்ற சூப்பரான இடங்களும் கடல் உணவுகள், படகு சரிவு என குடும்பத்துடன் ஜாலி பண்ணலாம்.
குடும்பத்துடன் நேரத்தை செலவிட கர்நாடகாவின் கார்வார் கடற்கரை இருக்கிறது. அமைதியான கடற்கரை ஓரத்தில் போர் கப்பல் அருங்காட்சியகம் இருக்கிறது.

குஜராத்தில் ஷிவ்ராஜ்பூர் கடற்கரை அமைதியான சுற்றுலா தலமாக இருக்கிறது.
கோவாவில் பலரது ஃபேவரைட்டாக இருக்கும் தெற்கு கோவா அமைதியாக இருக்கும் கடற்கரை பகுதிதான்.

உலகத்தில் இருந்து ஏராளமானோர் பயணிக்கு இடமான அந்தமானில் அழகான கடற்கரை, விதவிதமான உணவுகள், குளுமையான காற்று என குடும்பத்துடன் கோடை விடுமுறையை கொண்டாட ஏற்ற ஒரு இடம்..