குடும்ப குத்து விளக்காக இருந்து கவர்ச்சிக்கு மாறிய 45 வயது நடிகை.. என்ன கீர்த்தி?

Anjali Keerthy Suresh Meena Nayanthara Reema Sen
By Edward Jul 25, 2022 08:30 AM GMT
Report

சினிமாவை பொருத்தவரையில் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் நல்ல பேரை எடுக்க குடும்ப பாங்கான குத்துவிளக்கு பெண்ணாக அறிமுகமாகி பின் பிரபலமானதும் க்ளாமர் பக்கம் சென்றுவிடுவார்கள். அப்படி ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு க்ளாமர் ரோலை தேர்வு செய்து நடித்த நடிகைகளை பார்ப்போம். அந்த லிஸ்ட்டில் முதலிடம் பிடித்தவர்கள் கடைசி இடம் பிடித்தவர் என்றெல்லாம் கூறமுடியாது.

90ஸ் கிட்ஸ்களில் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர்களில் ஒருவர் நடிகை மீனா. ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான புடவையை அணிந்து ஹீரோயினாக நடித்து வந்தார். எஜமான், என் ராசாவின் மனசிலே உள்ளிட்ட படங்களில் அப்படி நடித்துவிட்டு க்ளாமர் ரூட்டுக்கு தாவி தாராளம் காட்டி வந்தார். இதேபோ முன்னணி நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்து வந்தார் நடிகை மீனா.

மின்னலே படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடிக்க ஆரம்பித்த ரீமாசென் தூள், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் படுமோசமான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்கவும் வைத்துள்ளார். தற்போது சினிமாவில் இருந்து விலகி வாய்ப்பில்லாமல் பாலிவுட் பக்கமே சென்றுவிட்டார்.

லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா, ஐய்யா, சந்திரமுகி படங்களில் அடக்கவுடக்க பெண்ணாக நடித்து பின் அப்படியே ரூட்டை க்ளாமர் பக்கம் சாய்ந்து படுகவர்ச்சி காட்டி வந்தார் தற்போது சேலையில் நடித்து நல்ல வரவேற்பும் பெற்று வருகிறார்.

நடிகை அஞ்சலியின் ஆரம்ப படமே முகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அங்காடி தெரு, கற்றது தமிழ் உள்ளிட்ட ஒருசில படங்களில் தாக்கு பிடித்து நடித்து வந்த அஞ்சலி தற்போது ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் நடிகர்களுடன் நெருக்கமாக க்ளாமர் காட்சிகள் என்று பட்டையை கிளப்பி வருகிறார்.

இந்த நடிகையும் இப்படி செய்வார்களா? என்று கூறும் அளவிற்கு ஆரம்பத்தில் அந்தமாதிரி காட்சிகளுக்கே இடம் கொடுக்காத நடிகையாக இருந்தவர் நடிக கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம், ரஜினி முருகன், தொடரி, மகாநடி உள்ளிட்ட பல படங்களில் குடும்ப குத்துவிளக்கு நடிகையாக பேர் எடுத்து வந்தார். தற்போது தெலுங்கு பக்கம் சென்று மகேஷ் பாபு படத்திற்கு பிறகு எல்லைமீறி நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் பேரை கெடுத்துக்கொண்டு வருகிறார்.

ராஜா ராணி, நேரம், நையாண்டி போன்ற படங்களில் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை நஸ்ரியா. ஆரம்பத்தில் இப்படியாக நடித்து வந்தவர் திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். அதன்பின் ஸ்லீவ்லெஸ் ஆடை குட்டையாடை என்று போட்டு நடித்து வருகிறார்.