இரட்டை அர்த்த வார்த்தையில் அவமானப்படுத்துகிறார்!! நடிகை ஹனி ரோஸ் குற்றச்சாட்டு..
ஹனி ரோஸ்
மலையாள சினிமாவில் 2005ல் கதாநாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்தவர் நடிகை ஹனி ரோஸ். கடந்த 2023ல் பலையாவுடன் ஜோடியாக நடித்தும் அம்மாவாக நடித்தும் இருந்தார்.
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ, கடைத்திறப்புவிழா நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொண்டு ரசிகர்களின் ஆதரவை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தன்னை பல மேடைகளில் இரட்டை அர்த்தவார்த்தைகளை கொண்டு வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நபருக்கு எதிராக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அந்த நபரின் பெயரை குறிப்பிடாமல் கடுமையான வார்த்தையில் ஹனி ரோஸ் பதிலடி கொடுத்துள்ளார். அதில், நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே அந்த நபர் வரமுயற்சிக்கிறார்.
அவமானப்படுத்தும் நபர்
எங்கு பேச வாய்ப்பு கிடைத்தாலும் பெண்மையை அவமானப்படுத்தும் விதத்தில் என் பெயரை ஊடகத்தில் கூறிகிறார்.
அதேபோல் இரட்டை அர்த்த வார்த்தைகளால் வேண்டுமென்றே தொடர்ந்து என்னை அவமானப்படுத்த முயற்சிக்கும்போது நான் எதிராக கருத்துக்களை வைப்பேன்.
அந்த நபர் தன்னை நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோது நான் செல்ல மறுத்ததற்கு பழிவாங்கும் விதமாக நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே வர முயற்சி செய்து செய்கிறார்.
பணபலத்தால் எந்தப்பெண்ணையும் ஒருவர் அவமானப்படுத்த முடியுமா? என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நடிகை ஹனி ரோஸ்.