மாலத்தீவு கடற்கரையில் கணவருடன் ஹனிமூன்! குக் வித் கோமாளி கனியின் தங்கை வெளியிட்ட புகைப்படம்..
தமிழ் சினிமாவில் தல அஜித்தின் வான்மதி, காதல் கோட்டை படத்தின் ஹிட் மூலம் பிரபல இயக்குநராக பிரபலமானவர் இயக்குநர் அகத்தியன். இதையடுத்து பல முன்னணி நடிகர்கள் படத்தின் பணியாற்றி புகழ் பெற்றார். அகத்தியனின் இரு மகள்களும் தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என்று பிரபலமாகி வருகிறார்கள்.
மூத்த மகள் கனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இளைய மகள் நிரஞ்சனி கடந்த ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தி நடிகையாக அறிமுகமானார்.
படம் பெரிய வெற்றியை பெற்றநிலையில் அப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் மீது காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பிப்ரவரி 25ல் நடந்த திருமணத்தை அடுத்து தற்போது இருவரும் ஹனிமூனிற்காக மாலத்தீவிற்கு சென்றுள்ளனர்.
அங்கு கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நிரஞ்சனி அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வாரம் நடைபெற்ற குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் அவரின் அக்கா கனி அகத்தியனுக்கு உதவியாக பங்கேற்றப்பின் மாலத்தீவிற்கு சென்றுள்ளார் நிரஞ்சனி.