என்னது ஹோட்டல் பேர் கொழுந்தியா-வா? வேற பேரே கிடைக்கலையாப்பா
Vadivelu
Viral Photos
By Edward
மக்கள் தாங்கள் நடத்தும் தொழிலை விளம்பரப்படுத்த விளம்பர பலகை வைத்தோ அல்லது புதுவகையாக யோசித்தோ விளம்பரப்படுத்துவார்கள். உயரகமான வணிக அங்காடி அல்லது ஓட்டல்கள், துணிக்கள் தங்கள் தகுதிக்கேற்ப பெரியளவில் விளம்பரம் செய்வார்கள்.
அப்படி ஒரு நபர் தன்னுடைய தகுதிக்கேற்ப ஓட்டல் பெயரையே விளம்பரமாக வைத்து வைரலாக்கியுள்ளார். திருநெல்வேலி விகே புரத்தில் ஒரு ஓட்டல் வைத்திருக்கும் நபர் ஓட்டலுக்கு பெயராக கொழுந்தியா என்று வைத்துள்ளார்.
அளவில்லா மீன் சாப்பாடு திறப்பு விழாவின் போது 5 நபருக்கு 50 சதவீதம் தள்ளுபடி என்ற விளம்பரப்படுத்தி பேனர் ஒன்றினை அடித்துள்ளார். இதனை தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
