அது நடக்கலன்னா செருப்பால கூட என்னை அடிங்க!! வெறுப்பில் புலம்பிய இயக்குனர்..
விஜய் டிவியில் பிரபலமான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் விக்னேஷ் கார்த்திக். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.
இதனை தொடர்ந்து, குறும்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த விக்னேஷ் கார்த்திக், ஏண்டா தலையில எண்ணை வெக்கல, திட்டம் இரண்டு, அடியே போன்ற படங்களை இயக்கி வந்தார். சமீபத்தில் பல நட்சத்திரங்களை வைத்து ஹாட் ஸ்பாட் என்ற படத்தினை இயக்கி இருக்கிறார்.
ஏ சான்றதழ் பெற்ற இப்படம் சமீபத்தில் வெளியாகியது. படத்தின் டிரைலர் வந்த போது பல விதமான விமர்சனங்களை பெற்று வந்தது. அதிலும் கெட்ட வார்த்தைகளும், ஆபாச வார்த்தைகள் காட்சிகள் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்காததால், விக்னேஷ் கார்த்திக், பேட்டியொன்றில் புலம்பி இருக்கிறார்.
படத்தினை தியேட்டரில் வந்து பார்த்தீர்கள் என்றால், நல்லா இருக்குன்னு சொல்லுவீங்க. நாங்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பு தரவில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால், தியேட்டர் வந்து பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும், பிடிக்கவில்லை என்றால் என்னை செருப்பால் அடிங்கள் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.