20 வயது குறைந்த நடிகையுடன் 2-ஆம் திருமணமா? கடுப்பான நடிகரின் முதல் மனைவி..
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். தற்போது 48 வயதாகும் அவர் தற்போது வரை இன்னும் இளமையுடன் பாடி ஃபிட்டாக இருந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 2014ல் தன் மனைவி சுசான் கான்னை விவாகரத்து செய்து பிரிந்தார்.
இருவருக்கும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் அவர்களுகாக நட்பாக பழகி வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டின் இளம் நடிகையான சபா அசாத்துடன் காதலில் இருந்து வருவதாக வதந்தி செய்திகள் வெளியாகி வைரலானது.
ஆனால் இருவரும் டேட்டிங் இருப்பதாகவும் விரைவில் ஹிருத்திக் ரோஷன் சபா அசாத்தை இரண்டாம் திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியது. சமீபத்தில் இருவரும் டின்னர் சாப்பிட்டு முடித்து கிளம்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் இருவரும் இந்த வதந்திகள் குறித்து எந்த தெளிவான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்களின் புகைப்படத்தை பார்த்து முன்னாள் மனைவி கடும் கோபத்தில் இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.