பவன் கல்யாண் படத்திற்காக விஷாலின் அண்ணியார் செய்த செயல்!! நடிகை சொன்ன ரகசியம்..
OG படம்
தெலுங்கு சினிமாத்துறையில் பவர் ஸ்டாராகவும் கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் நடிப்பில் இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் O.G என்ற படம் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகியுள்ளது.
பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகையும் விஷாலின் அண்ணியாருமான ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கிறார்.
ஸ்ரேயா ரெட்டி
இப்படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டியொன்றில், படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மற்றும் தோற்றம் பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் என் கதாபாத்திரத்திற்காக மேக்கப் போடாமல் நடித்துள்ளேன்.
கதாபாத்திரம் உண்மையானதாகவும் இயற்கையானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனது கதாபாத்திரம் நிறைய உணர்ச்சிகளை கொண்டுள்ளதாக நடிகை ஸ்ரேயா ரெட்டி தெரிவித்துள்ளார்.