குக் வித் கோமாளி சீசன் 6!! இந்த போட்டியாளர்தான் டைட்டில் வின்னராம்?
குக் வித் கோமாளி சீசன் 6
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தைன் ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. தற்போது சீசன் 6 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கிராண்ட் ஃபினாலே இந்த வாரம் நடந்துள்ளது.
மதுமிதா, கஞ்சா கருப்பு, சுந்தரி அக்கா, லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தக்குமார், பிரியா ராமன், ராஜு ஜெயமோகன், ஷபானா, உமைர், ஜாங்கிரி மதுமிதா ஆகிய 10 பேர் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில், இறுதி போட்டிக்கு ஷபானா, லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜு ஜெயமோகன், உமைர் போன்ற 4 பேர் தேர்வாகியுள்ளனர்.
இந்த 4 பேரில் சிறப்பாக சமையல் செய்து நடுவர்களை ஈர்த்து டைட்டில் வின்னாரானார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வந்தது.
ஏற்கனவே இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நடந்து முடிந்து வரும் 28 ஆம் தேதி 3 மணிநேரம் ஒளிப்பரப்பாகவுள்ளது.
டைட்டில் வின்னர்
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 6ல் முதல் ஆளாக ஃபைனலுக்கு நுழைந்த ஷபானா தான் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறாராம். இதனை பார்த்த பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஷபானாவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.