நான் இன்னும் கர்ப்பமாகல அப்போதான் அது நடக்கும்!! திருமணம் குறித்து ஷாக் கொடுத்த தனுஷ் பட நடிகை

Taapsee Pannu Indian Actress Tamil Actress Actress
By Edward Jul 18, 2023 06:45 PM GMT
Report

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ஆடுகளம். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை டாப்ஸி பண்ணு. இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த டாப்ஸி, இந்தி பக்கம் திரும்பினார்.

அங்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தீவிர உடற்பயிற்சியை பல மாதங்களாக செய்து வருகிறார் டாப்ஸி.

தற்போது குட்டியான ஆடையணிந்து சிக்ஸ்பேக் காமித்தபடி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் என்று கேட்டுள்ளார்.

அதற்கு டாப்ஸி, நான் இன்னும் கர்ப்பமாகவில்லை. அதனால் இப்போதைக்கு இல்லை என்றும் நடக்கும் போது சொல்கிறேன் என்று காமெடியாக கூறியிருக்கிறார். அவரின் இந்த பதில் பாலிவுட் நடிகைகள் திருமணத்திற்கு முன் கர்ப்பமாகி அதன்பின் கல்யாணம் செய்து கொள்வதை கலாய்க்க இப்படி கூறியிருக்கிறார்.

இதற்கு நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஏற்கனவே பாட்மிண்டன் வீரர் மாத்தியாஸ் என்பவருடன் காதலில் இருந்து வருவதாக சில புகைப்படங்களும் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.