75th Birthday : ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்னு அடம்பிடித்தேன்!! ரஜினிகாந்த் சொன்ன ரகசியம்..
75th Birthday - ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தின் வெற்றிக்கு பின் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் ரஜினிகாந்த், தன்னுடைய 75வது பிறந்தநாளை வரும் டிசம்பர் 12 ஆம் தேதி கொண்டாடவுள்ளார்.
இந்நிலையில் பிறந்தநாள் ஸ்பெஷலாக படையப்பா படத்தின் அனுபவங்களை The Return Of Padayappa - 75th Birthday Special வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

படையப்பா
அதில், 1999ல் படையப்பா படம் வெளியானது. சினிமாவில் 26 ஆண்டுகள் நிறைவுபெற்றபோது அப்படத்தினை தயாரித்தேன். கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரை பண்ண வேண்டும் என்று நினைத்தேன்.
அப்படி அந்த கதையை கே எஸ் ரவிக்குமாரிடம் சொல்லி ஸ்கீரின் ஃபிளே, டயலாக் செய்யவேண்டும் என்று கேட்டதற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டார். படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம் என்று நினைத்தபோது, படையப்பா என்று வந்தது. உடனே டைட்டிலை ரவிக்குமாரிடம் சொன்னேன்.

பின், தயானந்த சரஸ்வதியை சந்தித்து, படத்தின் டைட்டில் படையப்பா என்றதும் நல்லா இருக்கு என்று சொன்னார். படையப்பா என்பது முருகன் பெயர், ஆறுபடையப்பா என்றதும் டைட்டில் வைத்துவிட்டோம்.
ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும்
அதன்பின், நீலாம்பரி கேரக்டர் நினைக்கும் போது ஐஸ்வர்யா ராய் தான் மனதில் வரும், அவர் தான் சரி, அவர்தான் செய்யணும் என்று இருந்தேன். நடிகை ஐஸ்வர்யா ராய் தான் வேண்டும் என்று அடம்பிடித்தேன். ரொம்பவே பிஸியாக இருந்தார் ஐஸ்வர்யா ராய். எவ்வளவோ ட்ரை பண்ணினோம்.
நீலாம்பரி கேரக்டர் ஹிட்டானாதால் படம் நல்ல இருக்கும். ஐஸ்வர்யா ராய்க்கு விருப்பம் இல்லாத போது என்ன பண்ண முடியும்.

அதன்பின் ஸ்ரீதேவி பெயர்லாம் சொன்னார்கள். அதன்பின், ரம்யா கிருஷ்ணன் என்று ரவிக்குமார் சொன்னார். நானோ ரம்யா கிருஷ்ணனா?, தெலுங்கில் தான் நிறைய பண்ணி இருக்கிறார்கள், அவர்கள் படத்தை பார்க்கவில்லை.
பின் அவர் போட்டோ அனுப்பினார்கள், பின் லிப்ஃடில் பார்த்தேன். எடையை ஏற்றுவார்களா என்று அவரிடம் கேட்டு சொல்லுங்கள் என்று ரவிக்குமாரிடம் சொன்னேன். பின், படத்தை பிரம்மாண்டமாக எடுக்க ஆசைப்பட்டேன் என்று கூறினார் ரஜினிகாந்த்.