மிஷ்கின் தொட்டது அசெளரியமாக உணர்ந்தேனா? அப்படி இருந்தாலும்!! நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி..

Keerthy Suresh Gossip Today Mysskin Tamil Actress
By Jai Nov 19, 2026 12:34 PM GMT
Report

இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள சத்தியவான் சாவித்திரி படம் நாளை நவம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மிஸ்கின் தன்மீது கை வைத்தது சர்ச்சையான நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் கீர்த்தி.

மிஷ்கின் தொட்டது அசெளரியமாக உணர்ந்தேனா? அப்படி இருந்தாலும்!! நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி.. | I Was Not Uncomfortable Keerthy Suresh Shuts Down

கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் டோரதி, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்கள் வெளி வந்தது. அதனையடுத்து இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் மிஸ்கின் கூட்டணியில் சத்தியவதி சாவித்திரி படத்தில் நடித்துள்ளார்.

நாளை இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது கீர்த்தி சுரேஷை புகழ்ந்து பேசி தான் அணிந்திருந்த வாட்ச்சை பரிசாக அளித்தார் மிஷ்கின். இதனையடுத்து, கீர்த்தி சுரேஷின் நடிப்பை புகழ்ந்து அவர் தலையில் கை வைத்து நடிகையர் திலகம் என்று வைரம் வைத்திருக்கிறேன். அந்த பட்டத்துக்கு அவர் தகுதியானவர் என்றார்.

மிஷ்கின் தொட்டது அசெளரியமாக உணர்ந்தேனா? அப்படி இருந்தாலும்!! நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி.. | I Was Not Uncomfortable Keerthy Suresh Shuts Down

மேலும் பேசிய மிஷ்கின், கீர்த்தி சுரேஷின் காலில் கை வைத்தும் பேசினார். அப்போது கீர்த்தி சுரேஷ் தன் கையை கொண்டு வந்ததற்குள் மிஷ்கின் கையை எடுத்துவிட்டார். இதனை பார்த்த பலரும் காலில் கை வைத்ததை கீர்த்தி சுரேஷ் விரும்பவில்லை, அது மோசமான தொடுகை என்று விமர்சித்தனர்.

மிஷ்கின் தொட்டது

இதுகுறித்து கீர்த்தி சுரேஷ், முதலில் என்னுடைய முகத்தில் உங்களுக்கு எங்கே அசெளகரியம் தெரிந்தது. நாங்கள் இருவரும் தந்தை - மகள் போன்ற உறவை பகிர்ந்து கொள்கிறோம்.

அவரும் நானும் அப்படி சொன்னது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? ஒருவேளை நான் அசெளகரியமாக உணர்ந்ததாகவே வைத்துக்கொள்வோம், படங்களில் நாங்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நடிக்கிறோம் என்பதால், பொது இடங்களிலும் அப்படி செய்யும்போது எனக்கு எந்தப்பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று சொல்கிறீர்களா?

நீங்கள் சில விஷயங்களை சரியாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று சரியான பதிலடி கொடுத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.