விஜய்யை தொடர்ந்து அஜித் எடுத்த அதிரடி முடிவு!! என்ன தெரியுமா?
அஜித்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார், குட் பேட் அக்லி படத்திற்கு பின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
ஆனால் கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கும் அஜித், படத்தில் நடிக்க தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் தன்னுடைய ஆவணப் படத்தை ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் பல தயாரிப்பு நிறுவனங்கள் அஜித்தை வைத்து படத்தை தயாரிக்க காத்திருக்கும் நிலையில், அஜித் தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளார்.
அதிரடி முடிவு
சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதில் படத்தை தயாரித்துக் கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளாராம் அஜித். அதற்கான வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக, அவரின் ரேஸ் பற்றிய ஆவணப்படத்தை தயாரியக்கவுள்ளாராம்.

விரைவில் சினிமா பட தயாரிப்பு குறித்து அறிவிப்பும், அடுத்த மே மாதம் அவரது பிறந்தநாளுக்கு படப்பிடிப்பும் நடத்தவுள்ளார்களாம். ஏற்கனவே விஜய் சினிமாவை விட்டு அரசியலில் குதித்த நிலையில், அஜித் தற்போது முழு தயாரிப்பில் ஈடுபடுவாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.