வளரவிடாமல் தடுத்த வைகை!! என் பொண்ணுங்க இல்லைன்னா வடிவேலுவை முடிச்சிருப்பேன்!! பிரபல நடிகர்

Vadivelu Gossip Today
By Edward Mar 04, 2023 04:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் மீம்ஸ் கிரியேட்டர்களின் கிங்-ஆகவும் இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று புகழப்படும் வடிவேலு பலவிதத்தில் பலரால் புகழப்பட்டாலும் சிலரால் சாபத்தையும் கோபத்தையும் சம்பாதித்திருக்கிறார்.

அப்படி வடிவேலுவால் தன் வாய்ப்பை இழந்துள்ளேன் என்று ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார் காமெடி நடிகர் சிசர் மனோகர். ராசாவின் மனசிலே படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வடிவேலு.

scissor manohar

அவர் நடித்ததில் கவுண்டமணிக்கு பிடிக்காமல் போனது. அப்போது வடிவேலுவுக்கு ஆதரவாக தைரியம் கொடுத்தேன். ஆனால் 23 ஆம் புலிகேசி படத்தில் இளவரசன் ரோலில் நடிக்க வேண்டிய என்னை சிறு ரோலில் நடிக்க வைத்துவிட்டார் வடிவேலு என்று கூறியுள்ளார்.

மேலும் வடிவேலுக்கு உறுதுணையாக இருந்த என்னை, அவர் வளர்ந்தப்பின் என்னை கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் அவரை தீர்த்துக்கட்டலாம் என்று நினைத்த போது சீமான் தான் ஆறுதல்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் என் மூன்று பெண் பிள்ளைகள் இல்லாமல் இருந்திருந்தால் வடிவேலுவை உயிரோடு இருந்திருக்க விட்டிருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் சிசர் மனோகர்.

scissor manohar 23 pulikesi