எனக்கும் கவுண்டமணிக்கு இதான் பிரச்சனை!! அப்பவே உண்மைகளை உடைத்த பிக்பாஸ் நடிகை விசித்ரா..
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் போது போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டிகளை வைத்தும் வருகிறார் பிக்பாஸ். இது ஒரு பக்கம் இருக்க நடிகை விசித்ரா தனக்கு நடந்த சினிமா அத்துமீறல்கள் குறித்து பிக்பாஸ் வீட்டில் சில சம்பவங்களை பகிர்ந்திருந்தார். அந்த நடிகர் யார், எந்த படம் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கண்டுபிடித்து செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகை விசித்ரா செல்வதற்கு முன் அளித்த பேட்டியொன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. பெரிய குடும்பம் படத்தில் நடிக்க கமிட்டாகி படத்தின் பூஜை நடந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார் விசித்ரா.
நிறைய வதந்தி செய்திகள் வெளியானது. கவுண்டமணி, செந்திலுடன் இணைந்து நடித்தால் சம்பந்தப்படுத்தி பேசுவதுமாக இருந்தார்கள். நடிகர் பிரபு சார் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் பெரிய குடும்பம் படத்தில் என்னை கமிட் செய்திருந்தார்கள். அப்படத்தின் பூஜை சிவாஜி சார் வீட்டில் நடந்தது.
அப்போது ரவிக்குமார் சார் என் கையை பிடித்து, கவுண்டமணிக்கும் உனக்கும் என்ன பிரச்சனை. இதற்கு முன் முத்துக்குளிக்க வரீங்களா படத்தில் நடித்திருந்தேன். நீ அதை கிளியர் செய்யணும் என்று கூட்டிச்சென்று கவுண்டமணிக்கு வணக்கம் சொல்லு என்றதும் நான் வரும் போதே சொல்லிவிட்டேனே என்று கூறினேன்.
என் முன்னாடி சொல்லு என்றதும் நானும் வணக்கம் சார்னு சொல்லிட்டேன். நான் அவருக்கு வணக்கம் சொல்லவில்லை என்றும் நான் திமிரு பிடிச்ச பொண்ணுன்னு கவுண்டமணி சார் சொல்லுவாராம் என்று விசித்ரா கூறியிருக்கிறார். என்னை பொறுத்தவரை படத்தின் ஷூட் முடிந்ததும் கிளம்பிவிடுவேன்.
ஷூட் முடிந்து அரட்டை அடிப்பது, பார்ட்டிக்கு செல்வது எல்லாம் நான் செய்யவே மாடேன் என் வேலையை முடித்ததும் கிளம்புவேன் என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள், கவுண்டமணி ஷூட்டிங்கிற்கு பின் பார்ட்டிக்கு அழைத்திருப்பாரோ? அதனால் இப்படியொரு பதிலை விசித்ரா கூறியிருக்கிறார் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.